Connect with us

தொடங்கியது அதிமுகவின் ஆலோசனை கூட்டம்; கூட்டணிகளுக்கு எத்தனை இடங்கள்-குறித்த ஆலோசனை!

அதிமுக

தமிழகம்

தொடங்கியது அதிமுகவின் ஆலோசனை கூட்டம்; கூட்டணிகளுக்கு எத்தனை இடங்கள்-குறித்த ஆலோசனை!

தொடங்கியது அதிமுகவின் ஆலோசனை கூட்டம்; கூட்டணிகளுக்கு எத்தனை இடங்கள்-குறித்த ஆலோசனை!

இன்றைய தினம் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டே வருகிறது. அதன்படி பாஜகவினர் கமலாலயத்தில் ஆலோசனைக் கூட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு திமுக கட்சியினர் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளனர். அதில் தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கூட்டணி குறித்து மகிழ்ச்சியான தகவலை செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

ஏனென்றால் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் வருகின்ற 19ஆம் தேதி நடக்க உள்ளது இதனால் வார்டுகள் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் வலிமையான எதிர்க்கட்சியான அதிமுக தனது ஆலோசனை கூட்டத்தை தொடங்கியுள்ளது,

அதிமுக கூட்டணியில் இடம்பெறும் காட்சிகள் குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, குழு அமைப்பது, இடங்கள் ஒதுக்கீடு குறித்து ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top