Connect with us

அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி:

News

அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி:

8983b66a9d4beef80943d8171ec279ff

அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் இருந்து சமீபத்தில் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்களை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதன் பின் மீண்டும் நடந்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. பாஜக 40 தொகுதிகளை கேட்பதாகவும், ஆனால் அதிமுக 20 வரை கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் இந்த பேச்சுவார்த்தை தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 

ab4c83ba280534660d21a52b195273cf

இருப்பினும் 20 தொகுதிகளில் போட்டியிட பாஜக ஒப்புக்கொள்ளும் என்றே கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அமமுகவை கூட்டணியில் இணைக்க வேண்டும் என்றும் சசிகலாவுடன் சுமூகமான உறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பாஜக அறிவுறுத்தி வருகிறது. இதற்கு தான் அதிமுக தரப்பிலிருந்து எதிர்ப்பு வருவதாகவும் இதனால் அதிமுக பாஜக உறவே உடையும் நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top