Connect with us

அவன புடிங்கய்யா… அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பரபரப்பு!

admk office

News

அவன புடிங்கய்யா… அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பரபரப்பு!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற நபரை அதிமுக தொண்டர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர்கள், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாவட்ட செயலாளர்கள் வருகை தந்துள்ளனர் இவர்களுடன் அதிமுக தொண்டர்கள் என ஏராளமானோர் அதிமுக தலைமை அலுவலகம் முன்பு கூடியுள்ளனர். இதனை பயன்படுத்திக் கொண்டு கூட்டத்தில் ஒருவர் பிக்பாக்கெட் அடிக்க முயன்றுள்ளார்.

இதனை அறிந்த அதிமுக தொண்டர்கள் அவரை பிடித்து தரதரவென அதிமுக தலைமை அலுவலத்தில் வெளியே கொண்டுவந்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக தொண்டர்கள் ஒப்படைத்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top