வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து அதிமுக, விசிக வெளிநடப்பு! அப்படி என்னதான் நடந்தது?

திட்டமிட்டபடி இன்று காலை கலைவாணர் அரங்கத்தில் 2022 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி உள்ளது. இதில் தமிழகத்தின் ஆளுநர் ரவி வணக்கம் என்று கூறி தங்களின் உரையைத் தொடங்கியுள்ளார். அதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாக கொண்டே வருகிறது.

ரவி

அதன்படி தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய காலத்துக்கு ஏற்ப பள்ளி பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என்றும் ஆளுநர் ரவி கூறினார். அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் தொழிற் படிப்பில் சேரும் மாணவர்களுக்குஅனைத்து கட்டணத்தை அரசே ஏற்கிறது என்றும் ஆளுநர் ரவி கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் 6996 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள், கணினி கூடங்கள் அமைக்கப்படும் என்றும் கூறியிருந்தார். ஆனால் பலரும் எதிர்பார்த்திருந்த நீட் விலக்கு பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இதனால் தமிழகத்தின் தற்போதைய ஆளும் கட்சியாக உள்ள திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அவையை விட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.

நீட்தேர்வு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தின் எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment