Connect with us

லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் அதிமுக!!!

News

லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் அதிமுக!!!

5f80a3e5468b3c60703272a292ea4164

தற்போது நம் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ளது திமுக. இதனால் தற்போது தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உருமாறியுள்ளது அதிமுக. அதிமுக கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்பொழுது நம் தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மேலும் தற்போது சில தினங்களாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உரிய பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெறுகிறது.98b04cf78faebce5fdbf2357f6aba800

அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது அதிமுக. அதன் வரிசையில் தற்போது முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி யின்  பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது அதிமுக. அதன்படி எஸ் பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியுள்ளது அதிமுக.

மேலும் எஸ் பி வேலுமணி இது மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு பொய் குற்றங்கள் கூறப்பட்டு வந்தது என்றும் அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. மேலும் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் போய் குற்றங்களை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சந்திக்க தயார் என்றும் அதிமுக கூறியுள்ளது. மேலும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்து விட்டு மக்கள் நலப் பணிகளில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் என்று அதிமுக கூறியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top