அதிமுக குருவி கூட்டை கலைத்தவர் ஓபிஎஸ் – தீபக் அதிரடி பேட்டி!!

அதிமுக எனும் குருவி கூட்டை ஓபிஎஸ் கலைத்தார் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணமானது இன்று வரையில் மர்மமாகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

அதே சமயம் பிரபல தொலைக்காட்சி பேட்டியளித்த அவர் உடல்நிலை பாதிப்பால் ஜெயலலிதா மரணம் அடைந்தற்கு அப்போதைய முதல்வர் ஓபிஎஸ் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக எனும் குருவி கூட்டை ஓபிஎஸ் கலைத்ததாகவும், ஜெயலலிதாவை காப்பாற்றவே சசிகலா எப்போதும் நினைப்பார் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்றும் அதிமுக-வை கைப்பற்ற நான் ஒருபோதும் போட்டிபோட விரும்பவில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment