Connect with us

கல்யாணத்துக்கு சென்றது குத்தமா? பதவியை பறித்த அதிமுக! ஆலோசனை கூட்டத்தில் அதிரடி முடிவு;

admk flag

தமிழகம்

கல்யாணத்துக்கு சென்றது குத்தமா? பதவியை பறித்த அதிமுக! ஆலோசனை கூட்டத்தில் அதிரடி முடிவு;

கல்யாணத்துக்கு சென்றது குத்தமா? பதவியை பறித்த அதிமுக! ஆலோசனை கூட்டத்தில் அதிரடி முடிவு;

இன்றைய தினம் நம் தமிழகம் எங்கும் உள்ள அனைத்து கட்சிகளும் ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தியது. அதில் தமிழகத்தில் வலிமையான எதிர்க்கட்சியான அதிமுக கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன்படி சென்னை ராயபுரத்தில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

navaneetha krishanan 1

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேரதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அதிமுக கட்சியில் பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் விடுப்பு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பிலிருந்து நவநீதகிருஷ்ணன் எம்.பி விடுவிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளன.

திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் இல்லத் திருமண விழாவில் நவநீதகிருஷ்ணன் எம்.பி பங்கேற்று நிலையில் அதிமுக இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது. இவை அதிமுக சுற்றுவட்டாரத்தில் காட்டு தீ போல் வேகமாக பரவிக் கொண்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top