அதிமுகவை பொறுத்தவரையில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.
அதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதே சமயம் தற்போது வரையில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவி மட்டுமே இருந்து வருவகிறது.
குஜராத்தில் சாலை விபத்து: 9 பேர் உயிரிழப்பு!!
இந்த சூழலில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டதால் தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை ஏற்க அதிமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி இபிஎஸ் வசம் உள்ள நிலையில் கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டது ஏன்? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பீதியில் பொதுமக்கள்; ஜப்பானில் ஒரே நாளில் 420 பேர் பலி..!!
இதனையடுத்து, கடிதத்தில் குறிப்பிட்டுள்ள படி யாரும் இல்லை எனக்கூறிய அதிமுக அலுவலக நிர்வாகிகள் தலைமை தேர்தல் அதிகாரி கூட்டத்தினையும் புறக்கணிக்க வாய்ப்பிருப்பதாக அதிமுக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.