Connect with us

அதிமுகவினர் ரகசிய கூட்டம்: திமுகவினருக்கு செந்தில் பாலாஜி கோரிக்கை!!

senthilbalaji7 1637080582

தமிழகம்

அதிமுகவினர் ரகசிய கூட்டம்: திமுகவினருக்கு செந்தில் பாலாஜி கோரிக்கை!!

அதிமுகவினர் ரகசிய கூட்டம்: திமுகவினருக்கு செந்தில் பாலாஜி கோரிக்கை!!

வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையில் ஈடுபட அதிகமுகவினர் திட்டம் தீட்டியுள்ளதாக குற்றம்சாட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன நடந்தாலும் திமுகவினர் வாக்கு எண்ணிக்கையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வாக்கு எண்ணிக்கையினை எதிர்கட்சிகள் சீர்குலைக்க முயற்ச்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தனியார் மண்டபத்தில் அதிமுகவினர் ரகசிய கூட்டம் நடத்தியதாகவும் ஆயிரக்கணக்கான தொண்டர்களை வரவழைத்து வன்முறையைல் கட்டவிழ்த்துவிட அதிமுக திட்டமிட்டு இருப்பதாக கூறினார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைய யார் அதிகாரம் கொடுத்தது என கேள்வியெழுப்பியுள்ள செந்தில் பாலாஜி இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top