News
13 தொகுதிக்கு மேல் எதிர்பார்க்க வேண்டாம் எனக்கூறும் அதிமுக!
சட்டமன்ற தேர்தல் ஆனது அடுத்த மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக, அதிமுக போன்ற பல கட்சி, கூட்டணி கட்சிகளை இணைத்துஉள்ளது. இந்நிலையில் அதிமுக தரப்பில் பாஜக பாமக கூட்டணி உறுதியானது. மேலும் தேமுதிக-அதிமுகவுடன் கூட்டணி புரியுமா? இல்லையா? என்ற இழுபறி நிலவி வருகிறது.

அதிமுக தரப்பில் தேமுதிகவிற்கு 13 தொகுதிகளை வருவதாகவும் அதற்கு மேல் எதிர்பார்க்க வேண்டாம் எனவும் கூறுகிறது. முன்னதாக அதிமுக-தேமுதிகவிற்கு 9 தொகுதிகளை தருவதாக கூறியிருந்தது. இப்போது கூடுதலாக 4தொகுதி சேர்த்து 13 தொகுதிகளை தருவதாக முன்வந்துள்ளது.
ஆனால் தேமுதிக 23 தொகுதிகளை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.இதற்கு முன்னதாக தேமுதிக 41 தொகுதிகளைக் ஏற்றுள்ள நிலையில் தற்போது 23 தொகுதிகளில் இறங்கி வந்து விடுகிறது. இதனால் கூட்டணியில் இடம் பெறுகிறது என தேமுதிக நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்த உள்ளது.
