News
அதிமுக ஆட்சியில் வேளாண்துறையில் ஆயிரம் கோடி முறைகேடு!!
தற்போது தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறது,அந்த படி திமுக கட்சி சார்பில் முதல்வராக உள்ளார் அக்கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின். மேலும் அவர் மக்களுக்கு பயன்படும் விதமாக அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமித்துள்ளார், மேலும் அமைச்சர்களும் துறைகளில் மிகவும் சிறந்தவர்களாக காணப்படுகின்றன. நேற்றைய தினம் பிரகடனம் வெளியிடப்பட்டது, மேலும் அவற்றில் மிகவும் குறிப்பாக சொல்லப் பட்டது என்னவென்றால் தமிழகத்தில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் தங்களது உரை நிகழ்த்தினர் தற்போது சென்னை உயர்நீதிமன்ற கிளை சில முக்கியமான மனு தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி வேளாண்துறையில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது வேளாண் துறையில் 2013 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு என மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் அமைச்சரின் உறவினரான தட்சனமூர்த்தி முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளார் என்றும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்டதாக புகாருக்குள்ளான ஐஏஎஸ் அதிகாரி தட்சனமூர்தி எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார்.மேலும் திருச்சியை சேர்ந்த அப்துல்லா என்பவரின் வழக்கு விசாரணையை உயர் நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது. விவசாயிகளுக்கு இலவச திட்டங்களை போலி விவசாயிகளுக்கு வழங்கி மோசடி நடைபெற்றுள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இயக்குனராக இருந்த தட்சிணாமூர்த்தி மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி விவசாயிகளுக்கு புயல் நிவாரணம் வழங்கியதில் முறைகேடு என மனுவில் புகார் எழுந்துள்ளது.
