Connect with us

கூட்டணியில் இழுபறி இருந்தாலும் வேலையில் கண்ணாக இருக்கும் அதிமுக! மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

admk flag

Tamil Nadu

கூட்டணியில் இழுபறி இருந்தாலும் வேலையில் கண்ணாக இருக்கும் அதிமுக! மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

கூட்டணியில் இழுபறி இருந்தாலும் வேலையில் கண்ணாக இருக்கும் அதிமுக! மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

இன்றைய தினம் காலையில் எதிர்க்கட்சியான அதிமுகவில் மிகவும் பரபரப்பான நிலை காணப்பட்டது. ஏனென்றால் கூட்டணி கட்சியான பாஜகவுடன் இடப்பங்கீடு ஒதுக்கப்படாத நிலையில் காலையிலேயே முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது.

இதனால் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே இழுபறி வலுவானது. அதன்பின்னர் பாஜகவுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென்று சேலம் பயணம் மேற்கொண்டார்.

இதனால் பாஜக நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்தது. பாஜக அறிவித்த சிலமணி நேரங்களிலேயே அதிமுக தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து.

அதே வேளையில் இன்றைய தினம் பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் என்று  மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். இவ்வாறு அதிமுக-பாஜக இடையே என்னதான் இன்று இழுபறி நிகழ்ந்தாலும் அதிமுக தனது வேட்பாளர் பட்டியலில் முக்கியத்துவம் அளித்துக் கொண்டே வந்தது.

இதனால் இன்று ஒரே நாளில் மூன்று கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம், கும்பகோணம், தஞ்சாவூர், ஈரோடு, நாகர்கோவில், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மாங்காடு, குன்றத்தூர், மதுராந்தகம் போன்ற நகராட்சி வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி நகராட்சி வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top