அதிமுக தலைமை அலுவலகத்தில் அசல் ஆவணங்கள் காணவில்லை!! – சி.வி.சண்முகம் புகார்..

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரமானது விஸ்வரூபம் எடுத்திருந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் அவர்கள் கடந்த 11-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

இதனை எதிர்க்கும் விதமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் வன்முறை வெடித்தது. இதனால் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் ஈபிஎஸ் தரப்பினரிடம் சாவியை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டு இருந்தது.

இந்த சூழலில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அசல் ஆவணங்கள், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நேற்று சி.வி.சண்முகம் அதிமுக தலைமை பார்வையிட்டார்.

தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும், கோவை, புதுச்சேரி, திருச்சியின் அதிமுக அலுவலக இடத்திற்கான அசல் பத்திரங்களும் கொள்ளையடிக்கப்பட்டதாக அப்புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment