
தமிழகம்
அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அழைப்பு; எதற்காக தெரியுமா?
அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற இருக்கும் தீர்மானங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23-ஆம் தேதி சென்னை அடுத்த வாணரகத்தில் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இதில் கட்சியின் தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செயற்குழு பொதுக்குழு நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் மற்றும் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
