இரவில் திடீர் ரெய்டு; கஞ்சா பதுக்கிய அதிமுக நிர்வாகியை கொத்தாக தூக்கிய போலீஸ்!

சோழவந்தான் அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த அதிமுக கூட்டுறவு சங்க தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக அதிமுகவை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடமிருந்து 800கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். அதிமுகவை சேர்ந்த இவர் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியில் நிர்வாகியாக உள்ளார், மேலும் கருப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் பொறுப்பு தலைவராகவும் உள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு சோழவந்தான் போலீசார் கருப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த செல்வக்குமாரை பிடித்து விசாரித்து சோதனை செய்துள்ளனர்.

மேலும் படிக்க: https://tamilminutes.com/google-pixel-7-series-google-pixel-7-pixel-7-pro-price-and-specification/

அதில் அவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து செல்வக்குமாரை கைது செய்த சோழவந்தான் போலீசார் அவரிடமிருந்து 800 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் ஒருவர் கஞ்சா பதுக்கி வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment