Connect with us

அதிமுக அலுவலகத்தில் திடீரென அதிகரிக்கப்பட்ட போலீசார்!! எதற்காக தெரியுமா?

ADMK Office

தமிழகம்

அதிமுக அலுவலகத்தில் திடீரென அதிகரிக்கப்பட்ட போலீசார்!! எதற்காக தெரியுமா?

சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் மதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு இரண்டாவது நாளாக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்றைய தினத்தில் காவல்துறையின் பாதுகாப்பு என்பது உயர்த்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் போது ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இடையே அதிமுக தலைமை செயலகத்தில் வன்முறை சம்பவம் என்பது தொடர்ந்து அதிகரித்தது. இதனால் அதிமுக தலைமை செயலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் காவல்துறையின் எண்ணிக்கையானது தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக சுழற்சி அடிப்படையில் மூன்று குழுக்களாக காவல்துறையினரின் எண்ணிகையானது 50 முதல் 150 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனிடையே நாளொன்றுக்கு 450 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வை சண்முகி சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் இரண்டாவது நாளாக போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து குழுக்களாக வரக்கூடிய நபர்களை பரிசோதனை செய்து சாலைக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நேற்றைய தினத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் திருட்டு நடைபெற்றதாக இபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையின் பாதுகாப்பை அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top