Connect with us

அதிமுக அலுவலகம் சூறை.. சிபிசிஐடி திடீர் ஆய்வு!!

202008131141436175 Tamil News AIADMK executives consulting about CM candidate confusion SECVPF

தமிழகம்

அதிமுக அலுவலகம் சூறை.. சிபிசிஐடி திடீர் ஆய்வு!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தின் போது ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் கடும் மோதல்கள் நிலவி வந்தது.

அதன் ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக வின் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் தற்போது சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக-வின் தலைமை அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை அமர்வில் செப்டம்பர் 19-ம் தேதிக்குள் அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக எழுத்து பூர்வமாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில், இன்றைய தினத்தில் அதிமுக அலுவலகத்தில் பாதிக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் ஆவணங்கள் சூறையாடல் குறித்து சிபிசிஐடி போலீசார் நேரில் ஆய்வு நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top