அதிமுக அலுவலகம் மோதல் வழக்கு… ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு உத்தரவு!!!

அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றைதலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக கடந்த மாதம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் போது கடும் மோதல்கள் நிலவியது.

இதனால் பொதுமக்களின் நலன் கருதி அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டு பின்னர் இபிஎஸ் அவர்களிடம் உயர் நீதிமன்ற உத்தரவு படி வழங்கப்பட்டது. இந்நிலையில் திமுக அலுவலகத்தில் மோதல்கள் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சூழலில் தொண்டர்களுக்கு ஜாமீன் வழங்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது.

அப்போது பேசிய நீதிபதி அதிமுக மோதல்கள் தொடர்பான வழக்கில் இபிஎஸ், ஓபிஎஸ் தொண்டர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுவதாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதோடு 64 பேர் விசாரணை அதிகாரி முன் ஆஜராகவும், தலா ரூபாய் 20 ஆயிரம் அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு செலுத்தவும் கூறியிருந்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment