Connect with us

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு… முக்கிய புள்ளிகளுக்கு செக் வைக்கும் சிபிசிஐடி!!

202008131141436175 Tamil News AIADMK executives consulting about CM candidate confusion SECVPF

தமிழகம்

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு… முக்கிய புள்ளிகளுக்கு செக் வைக்கும் சிபிசிஐடி!!

ஒற்றை தலைமை விவகாரமானது அதிமுகவில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணையை அமர்வனது கடந்த சில தினங்களுக்கு முன் வந்தது. அப்போது பேசிய நீதிபதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்ற உத்தரை பிறப்பித்திருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தில் சூறையாடினர்.

இதன் காரணமாக சி.வி சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கானது சிபிசிஐடி மாற்றப்பட்டது. இந்த சூழலில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது.

அப்போது அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி கூறியுள்ளது.

இதனையடுத்து விசாரணை குறித்த அறிக்கையை செப்டம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top