Connect with us

அதிமுக அலுவலக சாவி குறித்த வழக்கு.. ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!!

ops

செய்திகள்

அதிமுக அலுவலக சாவி குறித்த வழக்கு.. ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!!

கடந்த மாதம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி பொதுக்குழு நடைபெறுவதை தடைவிதிக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தார். இதன் காரணமாக அதிமுக தலைமை அலுவலகமாக சூறையாடப்பட்டதால் அங்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக தலைமை அலுவலக சாவி இபிஎஸ் தரப்பினரிடம் கொடுக்குமாறு கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பினர் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தனர்.

அப்போது பேசிய நீதிபதி அதிமுக அலுவலகத்தில் நடந்த சண்டை என்பது அண்டை வீட்டுகாரர்கள் இடையேயான பிரச்சனையைல்ல.. தனிநபர்கள் போன்று இருவரும் அடித்துக்கொள்வதா? என கூறினார்.

ஒரு அரசியல் கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது எனவும் அலுவலக சாவியை இபிஎஸ் தரப்புக்கு வழங்கியது தவறில்லை என கூறி ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top