Connect with us

அதிமுக அலுவலக வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம்!!

202008131141436175 Tamil News AIADMK executives consulting about CM candidate confusion SECVPF

தமிழகம்

அதிமுக அலுவலக வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம்!!

கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் என்பது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் ஜூலை 11-ம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் கடும் மோதல்கள் நிலவி வந்தது.

குறிப்பாக ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பொதுமக்களின் நலன் கருதி வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

பின்னர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியானது இபிஎஸ்-யிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இதற்கு ஓபிஎஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு நிலவியது.

இந்நிலையில்அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஆவணங்கள் சூறை தொடர்பான வழக்குகள்  தொடரப்பட்ட நிலையில்  தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ராயபேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் மாற்றியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top