அதிமுகவில் பரப்பரப்பு! அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரில் ஆசிட் வீச்சு!!

திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் இன்று நடைப்பெறுகிறது. இதில் 12 மாவட்ட கவுன்சிலர்கள் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் நிர்வாகியுடன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னுடைய காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

ரெடியா இருங்க மக்களே! 6 மாவட்டங்களில் கனமழை அலர்ட் – வானிலை அப்டேட்!!

இதற்கிடையில் நாகம்பட்டி அருகே சென்ற போது 4 கார்களில் வந்த மர்ம நபர்கள் காரை சுற்றிவளைத்தனர். அப்போது மறைத்தி வைத்திருந்த ஆசிட் வீடியது மட்டுமல்லாமல் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

பின்னர் அதிமுக நிர்வாகியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அமைச்சர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட துணை காவல் ஆய்வாளர் நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் சோகம்! மின்சார ரயில் மோதி இளைஞர் பலி.!!

மேலும், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் மதியம் 2 மணியளவில் முடியும் என்பதால் மீண்டும் தேர்தல் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.