அதிமுகவில் டுவிஸ்ட்! ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு கடிதம்..!!!

அதிமுகவை பொறுத்தவரையில் ஒற்றை தலைமை விவகாரம் என்பது உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. அதன் படி, கடந்த ஜூலை 11-ம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

FlNL8HYacAQNGNj

இத்தகைய அறிவிப்பானது ஓபிஎஸ் தரப்பினருக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. இதனால் பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்ககோரி உயர்நீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் மனுவைத் தாக்கல் செய்தனர்.

அப்போது பொதுக்குழு கூட்டம் செல்லாது என நீதிபதிகள் அறிவித்திருந்தார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ததையடுத்து இபிஎஸ்-க்கு சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி இருந்தது.

FlNL RCaUAArvQZ

இந்த சூழலில் தலைமை தேர்தல் அதிகாரி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு இருப்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.