பாஜக தலைமையில் அதிமுக! முன்னாள் அமைச்சர் காரசார பேட்டி..!!

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் அதிமுக போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சர் ஆர். வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்திகளை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் கட்சியில் இணைவதே ஓ.பன்னீர் செல்வத்தின் எண்ணம் என தெரிவித்தார்.

இதுவே கட்சித் தொண்டர்களின் விருப்பம் எனவும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக கூடும் என தெரிவித்த அமைச்சர் பாஜக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் சந்திக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதே போல் தற்போது நிலவி வரும் ஒன்றை தலைமை விவகாரத்தில் பாஜக தலையிடவில்லை என கூறிய வைத்திலிங்கம் தேர்தலின் போது இபிஎஸ் தணித்து இயங்கினால் அவரை ஒதுக்கி வைத்து மற்ற அனைவரும் ஒன்றினைந்து செயல்படுவோம் என கூறினார்.

இதனையடுத்து எம்.ஜி.ஆர் எதற்காக கட்சியை ஆரம்பித்தாரோ அதன் வழியில் கட்சியின் உள்ள தொண்டர்கள் அனைவரும் ஒன்றினைய வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.