Connect with us

மார்ச் 27ஆம் தேதி அமைப்பு தேர்தல்-அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!!

ஓபிஎஸ் ஈபிஎஸ்

Tamil Nadu

மார்ச் 27ஆம் தேதி அமைப்பு தேர்தல்-அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!!

மார்ச் 27ஆம் தேதி அமைப்பு தேர்தல்-அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!!

கடந்த சில மாதங்களாகவே நம் தமிழகம் தேர்தல் களத்தில் சூடுபிடித்து காணப்படுகிறது. ஏனென்றால் கடந்த மாதம் தான் நம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு கவுன்சிலர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் மற்றொரு தேர்தல் நடைபெற உள்ளதாக காணப்படுகிறது. இது எதிர்க் கட்சிக்குள் நடக்கின்ற அமைப்பு தேர்தலாக காணப்படுகிறது. அதன்படி அதிமுக அமைப்பு தேர்தல் முதற்கட்டமாக 25 மாவட்டங்களுக்கு வருகின்ற இருபத்தி ஏழாம் தேதி நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி அறிவித்துள்ளனர்.

ஒன்றியம், நகரம், பேரூராட்சி கழக நிர்வாகிகளுக்கு அமைப்பு தேர்தல் நடைபெறும் என்றும் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர். ராணிப்பேட்டை, வேலூர் மாநகர், புறநகர், திருப்பத்தூர், திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்டங்களுக்கு அமைப்பு தேர்தல் நடைபெறும் என்றும் அதிமுக கழகம் அறிவித்துள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் புறநகர், மாநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் அமைப்பு தேர்தல் நடைபெறும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top