பசு தோல் போர்த்திய புலிகளின் கையில் அதிமுக சிக்கியுள்ளது – வி.கே.சசிகலா!!

அதிமுகவை ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இரட்டை இலையை கைப்பற்றுவதற்கு இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினரிடம் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது பேசிய அவர் உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை இல்லாமல் போட்டியிட யார் அதிகாரம் கொடுத்தது என்று கேள்வியெழுப்பியுள்ளார். அதோடு அதிமுக சட்டவிதிகளை மாற்ற யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது என்று கேள்வியெழுப்பி உள்ளார்.

இதனிடையே எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை 3வது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா என்றும் அதிமுகவில் நடப்பதை பார்த்து திமுகவினர் ஆனந்தமாக இருப்பதாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பசு தோல் போர்த்திய புலிகளின் கையில் சிக்கி அதிமுக சின்னாபின்னமாகி வருவதாகவும், தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளதாக சசிகலா கூறியுள்ளார்.

மேலும், தற்போது நிலவி வரும் ஒற்றை தலைமை விவகாரத்தில் வி.கே சசிகலா கூறியிருப்பது முக்கியத்துவமாக பார்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment