ஜெயக்குமார் ஒரு பபூன்… எடப்பாடி கிட்ட இருந்தால் இதுதான் கதி… அதிமுகவினரை அதிரவைத்த டிடிவி!

பழனிச்சாமியின் பிடியில் அதிமுக இருக்கும் வரை இரட்டை இலை சின்னமும் அதிமுகவும் இன்னும் பலவீனப்படும் மோசமான நிலையை அடையும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை கோச்சடை பகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியது: இடைத்தேர்தல் முடிவு அனைவருக்கும் தெரிந்த முடிவு மருங்காபுரி மற்றும் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் மட்டும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. மற்றபடி அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் ஆளுங்களுக்கு தான் வெற்றி பெறும் ஆளுங்கட்சி என்பதால் மக்கள் ஆளும் கட்சிக்கு ஓட்டு போட்டால் தொகுதிக்கு ஏதாவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் வாக்களிப்பது இயற்கையாக நடக்கக் கூடியது. இரட்டை இலை வழங்காவிட்டதால் மேற்கு மண்டலமே எங்களது கோட்டை என்று சொன்னார்கள். ஆனால் கலகலத்துபோகியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைய ஒரு சிலரின் சுயநலம் தடையாக இருக்கலாம் அந்த சுயநலம் உடைத்து எறியப்படும், பழனிச்சாமியுடைய தலைமைக்கு முதலமைச்சரான பிறகு அவர் டெல்லியின் ஆதரவு இருந்ததால் ஆட்சி அதிகாரம் இருந்ததாலுப், அதன் காரணமாக பணம் செல்வாக்கால் ஆட்சியை காப்பாற்றினார்.

ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள முடிந்தது மத்தியில் ஆள்பவர்களின் உதவி இருந்ததால் பதவியில் இருந்தார். இது ராஜதந்திரம் இல்லை குப்பனோ சுப்பனோ இருந்தால் கூட அந்த ஆட்சியை காப்பாற்றி இருக்க முடியும்.  பழனிச்சாமி சிலரை வசப்படுத்தி வைத்துள்ளார் கட்சியின் தலைமை பதவியை வகிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.தவறான பாதையில் தவறான மனிதராக இருக்கிறார் பழனிச்சாமி.

2500 பேரை வசப்படுத்தி தொண்டர்களால் என் பின்னால் என சொல்கிறார். அவர் உண்மையான தலைவர் இல்லை. ஈரோடு பகுதியை கோட்டை என கூறிவிட்டு ஏன் கோட்டை விட்டார்கள்?2016 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்குகளை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பில் இவர்கள் நீக்கப்பட்டது சரி என்ற தீர்மானம் தொடர்பான சரத்து இல்லாததனால் உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். ஜெலலிதா தான் நிரந்தர பொதுச் செயலாளர் என அறிவித்தார்கள். ஆனால் அந்த பதவியை பிடுங்கி விட்டார்கள்.

பழனிச்சாமியின் பிடியில் அதிமுக இருக்கும் வரை இரட்டை இலை சின்னமும் அதிமுகவும் இன்னும் பலவீனப்படும் மோசமான நிலையை அடையும்,உண்மையான தொண்டர்களை ஒருங்கிணைக்கும். நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் வசப்படுத்தி வைத்துள்ளார். பணபலம் அதிகாரத்தை வைத்துள்ளார். தொண்டர்கள் சோர்ந்து போய் உள்ளார்கள்.

தேர்தல் கூட்டணி பற்றி நவம்பர் டிசம்பரில் முடிவு செய்வோம். . நாங்கள் பழனிச்சாமி தலைமையில் இணைய வாய்ப்பே இல்லை நாங்கள் தனி இயக்கம் எங்களை இணைக்க கூடாது என ஜெயக்குமார் பேசுவது ஒன்று அவர்கள் செவிடர்களாக இருக்க வேண்டும் இல்லை. வெற்றிகரமான தோல்வி என்று கூறுவது மீசையில் மண்ணு ஒட்டாதது என்பது போல ஜெயக்குமார் பேசுவதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை .அவர் பபூன் மாதிரி ஏதாவது பேசிக் கொண்டிருப்பார் என ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.