தமிழகம் முழுவதும் திமுக அரசிற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடும் அதிமுக

நம் தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து இன்று வலிமையான எதிர்க்கட்சியாக உருமாறியுள்ளது அதிமுக. ஒவ்வொரு சட்டப்பேரவை கூட்டத்திலும் ஆளுங்கட்சியினர் செய்யும் ஒவ்வொரு திட்டங்களை குறித்து அதிமுக கேள்விகளை எழுப்பும்.

அதிமுக

அதுவும் குறிப்பாக திமுக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு பொருட்களோடு சேர்த்து பரிசு தொகை வழங்க வேண்டும் என்று சில நாட்களாகவே கோரிக்கை வைத்து வந்தது.  இந்த நிலையில் தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து எதிர்க்கட்சியான அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

அதன்படி திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக போராட்டம் நடத்திவருகிறது. தேனி பங்களாமேட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

மக்கள் நலன் காக்கும் பல்வேறு பணிகளை திமுக அரசு செய்யத் தவறியதால் குற்றஞ்சாட்டி அதிமுக அரசு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகையை வழங்க கோரியும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment