செய்திகள்
“கூட்டணிக்கு ஒன்று கொடுத்து 13 இடங்களில் போட்டியிடுகிறது அதிமுக!!”
தற்போது தமிழகத்தில் எதிர் கட்சியாக உள்ளது அதிமுக. இந்த நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மிகுந்த வலிமையான கூட்டணியோடு தேர்தலை சந்தித்தது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமக பாஜக என்ற இருபெரும் கட்சிகள் இருந்தன. மேலும் இந்த இரண்டு கூட்டணிகளும் வரவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்த்த நிலையில் பாமக கூட்டணியில் இருந்து விலகியது.
ஆனால் பாஜக, அதிமுகவோடு கூட்டணி உள்ளது.தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் அதிமுக கூட்டணியோடு களமிறங்க உள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 13 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 14 மாவட்ட கவுன்சிலர் இடங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் மீதமுள்ள ஒரே ஒரு மாவட்ட கவுன்சிலர் இடத்தை பாஜகவுக்கு தந்தது அதிமுக. அதோடு மட்டுமல்லாமல் அங்கு மொத்தம் நூற்று முப்பத்தி எட்டு ஒன்றிய கவுன்சிலர் இடங்கள் உள்ளன. அதில் அதிமுக 130 இடங்களில் போட்டியிட உள்ளது பாஜக வெறும் எட்டு இடங்களிலும் போட்டியிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
