தமிழகம்
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்!
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் என்று காலை 10 மணிக்கு அகற்றப்பட்டது. இந்நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் சிலை அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் கடந்த 11-ம் தேதி மிகப் பெரிய வன்முறை வெடித்ததால் பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் வருவாய்துறை அதிகாரிகள் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
இந்த சீல் வைக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 நாட்களாக நீக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடுத்த வழக்கின் அடிப்படையில் அலுவலகத்தின் சாவி இபிஎஸ் தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அந்தவகையில் இன்று காலை 10 மணி அளவில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சிலை அகற்றப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மயிலாப்பூர் புதிய வட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் சீலை அகற்றினார் .
மேலும், அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சாவி வழங்கப்பட்டது. அதிமுக அலுவலகம் ஆனது முழுவதுமாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
