ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அதிமுக சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை தொடங்கியது முதலே திமுக தேர்தல் நடத்தை விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக அதிமுக தொடர்ந்து குற்றச்சாட்டி வந்தது.
இந்நிலையில் இன்று தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளார். அதில் பெண்களுக்கு மாதம் ரூ.1000/− வழங்குவதாக தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் பேசியது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே முதல்வர் ஸ்டாலின் மீதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்ககூடாது என விளக்கம் கேட்கவேண்டும் என்றும், சம்மந்தப்பட்ட ஈரோடு மாவட்ட ஆட்சியர் ,தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.