Connect with us

வார்டுக்கு 100 பேர் என வாக்கு எண்ணிக்கை மையங்களில் குவிக்க அதிமுக ஏற்பாடு!: செந்தில்பாலாஜி

அதிமுக

தமிழகம்

வார்டுக்கு 100 பேர் என வாக்கு எண்ணிக்கை மையங்களில் குவிக்க அதிமுக ஏற்பாடு!: செந்தில்பாலாஜி

வார்டுக்கு 100 பேர் என வாக்கு எண்ணிக்கை மையங்களில் குவிக்க அதிமுக ஏற்பாடு!: செந்தில்பாலாஜி

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி நடைபெறும் முடிந்தது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. தேர்தலுக்கு முந்தைய நாளில் கோவையில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு பலரும் வன்மையாக கண்டனத்தை தெரிவித்தனர். இதனால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டு வந்தனர். இந்த நிலையில் அதிமுகவினர் அத்துமீறலில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி இவ்வாறு புகார் கூறினார். நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையில் ஈடுபட அதிமுக திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் புகார் அளித்துள்ளார்.

ஒரு வார்டுக்கு 100 பேர் வீதம் வாக்கியங்களில் குவிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கோவையில் நடந்த ரகசிய கூட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி புகார் கூறினார்,

வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்கும் அதிமுக முயற்சிகளை எதிர்கொள்வதற்கு திமுக முகவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் செந்தில்பாலாஜி கூறினார். அதிமுகவினர் வன்முறையில் இறங்கினாலும் திமுகவினர் அமைதி காக்க வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் திமுக கூட்டணியே கைப்பற்றும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெற திமுகவினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும் செய்தியாளர்கள் மத்தியில் செந்தில் பாலாஜி கூறினார்

உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவின்போது அதிமுகவினர் அத்துமீறி நடந்து கொண்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி புகார் அளித்தார். விதிகளை மீறி அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாக்குச்சாவடிகள் சென்றதாக அமைச்சர் குற்றச்சாட்டை வைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top