Connect with us

ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா?- ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

உயர்நீதிமன்றம்

தமிழகம்

ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா?- ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் என்பது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் மோதல்களில் ஈடுபடுவது, போஸ்டர்கள் ஒட்டுவது போன்று ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 23-ம் தேதி நடைப்பெற்ற அதிமுக பொதுக் குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்த நிலையில் அவைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் சண்முகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கின் விசாரணை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு இன்று வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதால் இபிஎஸ், ஓபிஎஸ், தமிழ்மகன் உசேன், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், அதிமுக-வின் பொதுக்குழு நடத்துவதற்கு தடைவிதிக்க கோரி தனி நீதிபதியைத்தான் அணுக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கின் விசாரணை தள்ளி வைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top