அதிமுக பொதுக்குழு தீர்ப்பு: இபிஎஸ் முறையீடு!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரமானது விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் ஜூலை 11-ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணையானது நேற்று வந்த நிலையில் ஓபிஎஸ்-க்கு சாதகமா ஜூலை 11-ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு பொதுக்குழு கூட்டம் செல்லாது என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார்.

இத்தகைய தீர்ப்பால் இபிஎஸ் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்திருந்தனர். இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணைந்து வெற்றிப்பெறலாம் என அழைப்பு விடுத்திருந்தார்.

அதோடு அதிமுக இரு பிளவுகளாக மாறும் போது ஆளும் கட்சியான அதிமுக பலப்படும் என்றும் இதனை கருத்தில் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இருப்பினும் தற்போது ஓபிஎஸ் அழைப்பை ஏற்க மறுத்த ஈபிஎஸ் தரப்பில் அதிமுகவின் முந்தைய நிலையே தொடர தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment