அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், பொதுக்குழு கூட்டம் செல்லாது என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மாதம் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கை தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பளித்தார்.
இதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தனி நீதிபதி யூகத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதாக இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
அதே போல் பொதுக் குழு ஒப்புதல் பெறாவிட்டால் பதவிகள் காலாவதி என கட்சி விதிகளில் எங்கும் கூறப்படவில்லை என்று வாதிட்டது. இரு தரப்பு வாதங்களும் முடிவுற்ற நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது வழக்கின் விசாரணை அமர்வு இன்று வந்த நிலையில், அப்போது பேசிய நீதிபதி அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் பிறப்பித்துள்ளார்.