Connect with us

ஓபிஎஸ் போட்ட பக்கா ஸ்கெட்ச்!! அதிர்ச்சியில் இபிஎஸ்;;

Capture 27

தமிழகம்

ஓபிஎஸ் போட்ட பக்கா ஸ்கெட்ச்!! அதிர்ச்சியில் இபிஎஸ்;;

ஜூலை மாதம் 11-ஆம் தேதியில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதித்தும், கட்சிப் பதவிகளில் மாற்றம் கொண்டுவர தற்காலிக தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் அவர்கள் நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனிடையே ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அரங்கேறிய மோதல்கள் மற்றும் நிகழ்வுகளை தொடர்ந்து இபிஎஸ் அவர்கள் பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார்.

இந்நிலையில் அடுத்த மாதம் நடைப்பெறும் பொதுக்குழு கூட்டமானது ஓபிஎஸ்-க்கு தெரியாமல் அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் இது குறித்து உடனடியாக அறிக்கையும் வெளியிட்டார்.

அதன் பிறகு நேற்று மாலை சென்னை கிளம்பி வந்த அவர் சட்ட நிபுணர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சூழலில் அடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கு திட்டமிட்டிருக்கும் இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் கடிதமானது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அதே சமயத்தில் இபிஎஸ் அவர்கள் தனது தரப்பில் அறிக்கையை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top