Connect with us

அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு!!

ops

தமிழகம்

அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு!!

கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .

இந்த வழக்கின் தீர்ப்பானது சில தினங்களுக்கு முன் இரு நீதிபதி அமர்வு முன் வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தனர்.

இத்தகைய தீர்ப்பானது ஓபிஎஸ் தரப்பினரிடம் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதன் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

தற்போது பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருப்பதாக அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இருப்பினும், ஓபிஎஸ் மேல்முறையீடு செய்வதற்கு முன்பே இபிஎஸ் தரப்பில் இருந்து கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top