அதிமுக பொதுக்குழு: உயர் நீதிமன்றம் திடுக்கிடும் கேள்வி!!!

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் என்பது உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இபிஎஸ்,ஓபிஎஸ் தரப்பினரிடம் கடும் மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக ஜூலை 11-ம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் மனு தாக்கல் செய்த வழக்கின் விசாரணையானது இன்று அமர்வுக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கஞர் குரு கிருஷ்ணகுமார் கடந்த 2017-ம் ஆண்டு நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த ஜெயலலிதா நிரந்தரப் பொதுச்செயலாளர் என்பதை தெரிவித்தார்.

அதோடு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி என்பதை சுட்டிக்காட்டினார். அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதி பொதுக்குழு கூட்டமானது விதிகளின்படி நடத்தப்பட்டதா? என்ற வாதங்களை மட்டும் முன்வையுங்கள் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை எப்படி தேர்வு செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் ஜெயலலிதாவை அடிப்படை உறுப்பினர்கள் மட்டுமே தேர்வு செய்ததாக கூறியுள்ளார்.

இத்தகைய திட்டத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாக ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் இந்த வாதம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment