அதிமுக பொதுக்குழு விவகாரம்… உத்தரவாதம் அளித்த இபிஎஸ்..!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே பொதுக்குழு விவகாரமானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பினரிடம் கடும் மோதல்கள் நிலவி வருகிறது..

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ் கூறுகையில் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது மக்களுக்கு தெரியும் என கூறினார்.

அதே போல் பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்ற நீதிமன்றம் தீர்ப்பளித்தது 95% வெற்றிக்கு சமம். இதனிடையே விசாரணை முடியும் வரையில் பொதுக்குழு கூட்டக் கூடாது ந்ன நாங்கள் உத்தரவாதம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நிறைவுப்பெற்றதாக கூறியுள்ளார். இதனையே தான் திமுக நிறைவேற்றி வருவதாக கூறியுள்ளார்.

மேலும், கோவையில் 41 பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் பல முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் கொதித்து போய் இருப்பதாக கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment