அதிமுக பொதுக்குழு வழக்கு: நாளை மறுநாள் ஒத்திவைப்பு!!

அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணையை நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் ஜூலை 11-ம் தேதி நடைப்பெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டமானது செல்லாது என அறிவித்த நீதிபது ஜெயசந்திரன் தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் தனி நீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமல் விசாரணைக்கு பட்டியலிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி துரைசாமி அமர்வு ஏற்றுக்கொண்டு வழக்கின் விசாரணையை இன்று பட்டியலிட உத்தரவு பிறப்பித்து இருந்தது.

அதனடிப்படையில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில் ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜராக இருப்பதால் வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.

குறிப்பாக வழக்கின் விசாரணையை வியாழக்கிழமை ஒத்திவைக்க வேண்டும் என வாதிடப்பட்டு இருந்தது. இதனை ஏற்று வழக்கின் விசாரணையை வருகின்ற வியாழக்கிழமை தள்ளி வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment