அதிமுக பொதுக்குழு வழக்கு: உச்சநீதிமன்றம் புதிய தீர்ப்பு!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நவ.30-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

கடந்த சில மாதங்களாக அதிமுகவில் ஒன்றை தலைமை விவகாரம் என்பது உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தனர்.

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு!!

அதே சமயம் இபிஎஸ் தரப்பில் பொதுக்குழு விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் இபிஎஸ் மனுதாக்கல் செய்திருந்தார். அதற்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என வைரமுத்து சார்பில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சூழலில் வழக்கின் விசாரணை அமர்வு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான் துலியா முன் வந்தது. அப்போது அதிமுகவின் கட்சி விதிகளை ஓபிஎஸ் மீறியதாக இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

17 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோவில் இளைஞர் கைது!!

இது குறித்து இபிஎஸ் பட்டியலிட்டு மனுதாக்கல் செய்வதால் கூடுதலாக ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என தெரிவித்தனர். இதனை ஏற்ற நீதிபதிகள் விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.