அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் என்பது சூடு பிடித்திருக்கும் நிலையில் கடந்த மாதம் நடைப்பெற்ற பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்குமாறு ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதிக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி இந்த வழக்கை இரண்டு வாரத்திற்குள் முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணசாமி முன் பட்டியலிடப்பட்ட நிலையில் ஓபிஎஸ் தரப்பில் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில் பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கை கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையில் அதிமுக பொதுக்குழு வழக்கு விவகாரம் தொடர்பாக நீதிபதியை மாற்றக்கோரிய விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு நீதிபதி மீது எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை என நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரிய மனுவை வாபஸ் பெற போவதாக அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.