அதிமுக பொதுக்குழு வழக்கு: விசாரணை நாளை ஒத்திவைப்பு!

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையானது இன்று மதியம் 2.30 மணியளவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுக்குழு தொடர்பான பல்வேறு விவாதங்கள் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் வைக்கப்பட்டது.

அப்போது இருதரப்பினரிடம் பல்வேறு விதமான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். இதற்கு உரிய முறையில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் விளக்கங்களை முன்வைத்தனர்.

கீழே விழுந்த எம்.ஜி.ஆர் சிலை… கதறிய அமமுக நிர்வாகி!!

குறிப்பாக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக அதிமுக பாதிக்கப்படுவதாகவும், இதனால் வழக்கை விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என இபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டது. அதே போல் தொண்டர்களின் ஆதரவோடு ஒருமனதமாக தேர்வு செய்யப்பட்டதாக கூறினர்.

அதே சமயம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் 5 ஆண்டுகள் உள்ளது. அதாவது வருகின்ற 2026-ம் ஆண்டு வரையில் பதவிக்காலம் இருப்பதால் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை நாளை ஒத்திவைத்தார்.

முதியவரை திருமணம் செய்த மகள்? வைரல் வீடியோ இதோ!

மேலும், இந்த வாரமே அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கினை முடிவுக்கு கொண்டு வருவதே நீதிபதிகளின் விருப்பம் என அவர்களும் தெரிவித்திருப்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.