அதிமுக பொதுக்குழு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அதிமுகவை பொறுத்த வரையில் கடந்த மாதம் ஜூலை 11-ம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இத்தகைய முடிவு ஓபிஎஸ் தரப்பினரிடம் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அமர்வு நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓபிஎஸ் தரப்பில் இரட்டை தலைமை காலாவதியாக ஆகிவிட்டதாக இபிஎஸ் தரப்பினர் கூறுவதை ஏற்க முடியாது. காரணம் அதிலிருந்து தான் எல்லா பிரச்சனைகளும் தொடங்கியதாக தெரிவித்தனர்.

மறந்துடாதீங்க! ஜல்லிக்கட்டு ஆன்லைன் முன்பதிவு … நாளை கடைசி நாள்!!

அதே போல் இடைக்கால பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்திற்காக விளக்கம் கேட்டு எந்த நோட்டீசும் ஏதும் கொடுக்காமல் மூத்த தலைவரும், பொருளாளருமான ஓ.பி.எஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.