அதிமுக பொதுக்குழு வழக்கு… விசாரணை ஜன.4-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

அதிமுக பொதுக்குழுவானது ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்டு அன்றைய தினத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதன்படி, தீர்மானங்களை ரத்து செய்யவேண்டும், பொதுக்குழு செல்லாது என்பதை அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

ஷ்ரத்தா கொலை வழக்கு… போலீசார் புதிய தகவல்!!

இந்நிலையில் பொதுக்குழு வழக்கில் தேர்தல் ஆணையத்தினை இணைக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழலில் நேரம் முடிவுற்றதன் காரணமாக இன்று விசாரணைக்கு உட்படுத்தப்படும் என ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது விசாரணை அமர்வு நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அதிமுகவில் பொதுக்குழு மற்றும் பொதுக்குழு தொடர்பாக தீர்மானங்கள் காலாவதி ஆகி விட்டதாக இபிஎஸ் தரப்பில் இன்று வாதிடப்பட்டது.

ஓடும் பேருந்தில் இறங்கிய மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!

அதேசமயம் இடைக்கால மனுவை விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது பொதுக்குழு விவகாரம் மீதான விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.