அதிமுக பொதுக்குழு வழக்கு… இன்று மீண்டும் விசாரணை..!!!

அதிமுகவை பொறுத்த வரையில் ஒற்றை தலைமை விவகாரம் என்பது உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்படார்.

இத்தனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது பொதுக்குழு கூட்டம் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி!!

இதில் பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பளித்தனர். இத்தகைய முடிவானது ஓபிஎஸ் தரப்பினர் மத்தியில் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதனால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை அமர்வில் ஒபிஎஸ்-யின் மூத்த வழக்கறிஞர் ஆஜராகாமல் இருந்ததாலும், இபிஎஸ் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் வழக்கின் விசாரணை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இனி புகைப்பிடிக்கக் கூடாது!! நியூசிலாந்தில் சட்டம் நிறைவேற்றம்..!!

அதன் படி, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணை அமர்வு இன்று மீண்டும் விசாரணைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.