
செய்திகள்
15 வகை ஐயிட்டங்களுடன் 5 ஆயிரம் தொண்டர்களுக்கு தடபுடல் விருந்து தயார்… மெனு லிஸ்ட் இதோ!
அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே ஒற்றை தலைமை விவகாரம் வலுத்து வரும் நிலையில், இன்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடியுள்ளது. சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிகாலை 6 மணி முதலே அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அதிமுக தொண்டர்கள் வானகரத்தில் குவிந்து வருவதால், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதேபோல் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தொண்டர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பிய படியே உள்ளனர். கூடை, கூடையாக மலர்களை தூவி வரவேற்பு அளிக்க காத்திருக்கின்றனர்.
உட்கட்சி தேர்தல் நடைபெற்ற பிறகு முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுமதி வழங்கவில்லை
அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் 2665 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
அதிமுக அவைத்தலைவர், ஒருங்கிணைப்பாளர்கள், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், அதிமுக பல்வேறு அணிகளைச் சார்ந்த செயலாளர்கள் என 50 க்கும் மேற்பட்டோருக்கு மேடையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுக்குழுவில் பங்கேற்கும் 5 ஆயிரம் பேருக்கு வாழை இலையில் சுவையாக உணவு பரிமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெனுவில் இடம் பெற்றுள்ள உணவு வகைகள் இதோ…
1. சாதம்
2. சாம்பார்
3. வத்தக்குழம்பு
4. ரசம்
5. மோர் மிளகாய்
6. ஜாங்கிரி
7. ஊறுகாய்
8. தயிர்சாதம்
9. வெஜ் பிலாவ்
10. பருப்பு வடை
11. உருளைக்கிழங்கு பொறியல்
12. பாதாம் கீர்
13. முட்டை கோஸ் பொறியல்
14. கேரட் பொறியல்
15. அப்பளம்
