Connect with us

இபிஎஸ் ஆட்டம் ஓவர்!! உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

ops eps hc5 1657621628

தமிழகம்

இபிஎஸ் ஆட்டம் ஓவர்!! உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

அதிமுக பொதுக்குழு கூட்டமானது செல்லாது என ஓபிஎஸ் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னையில் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் அவர்கள் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை நீக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டதால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இபிஎஸ் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். தற்போது இந்த விவகாரத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அந்த வகையில் அதிமுக பொதுக்குழு கூட்டமானது செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top