Connect with us

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக கைது!!

202006280512395446 Minister Jayakumar was isolated at home SECVPF

தமிழகம்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக கைது!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக கைது!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளன்று சென்னை ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடியில்கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி  திமுக தொண்டரை  அதிமுக பிடித்தனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் திரண்ட அதிமுகவினர் திமுக தொண்டரின் சட்டையை கழற்றி அரைநிர்வாணப்படுத்தினர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட திமுக தொண்டர்  அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார் உட்பட 40 நபர்களின் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற 8 பிரிவுகளில் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

இதனிடையே  வழக்குபதிவு நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவார் என கூறப்படுகிறது. மேலும், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top