அதிமுக பொதுக்குழு தொடர்பான விவகாரம் என்பது உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே கடும் மோதல்கள் நிலவி வருகிறது. அதன் ஒரு பகுதியாக உச்சநீதிமன்ற தினேஷ் மகேஸ்வரி அமர்வில் வழக்கு விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில் பொதுக்குழுவுக்கு கட்சியின் விதிகளை கட்டமைக்கவும், அமல்படுத்தவும் முழு அதிகாரம் இருப்பதால் ஓ.பி.எஸ் தரப்பு அடிப்படை உறுப்பினர்களை கூட்ட வேண்டும் என்று ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர் ? என இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
கேரளாவில் பிரியாணி சாப்பிட்ட மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்!
இதனிடையே கடந்த ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் பங்கேற்ற 2,460 உறுப்பினர்கள் கலந்தகொண்டு பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக அங்கீகரித்தனர். இத்தகைய முடிவானது அதிமுக விதிகளின் படி, 94.5% ஆதரவு என கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் தொண்டர்களால் அல்ல மாறாக பொதுக்குழு உறுப்பினர்களால் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை அதிரடி குறைவு; நகைக்கடையில் குவியும் இல்லத்தரசிகள்!!
அதே போல் பொதுக்குழு எடுத்த முடிவுகளை குறித்து மட்டும் கேள்விக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது என்றும் இபிஎஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.